BREAKING NEWS

பெண்கள்

வினோதம்

பொதுமருத்துவம்

ஆண்கள்

Tuesday, 3 February 2015

மலட்டுத் தன்மையை உண்டாக்கும் 12 மோசமான உணவுகள்..!

மலட்டுத்தன்மை என்பது மிகப்பெரிய சாபமாக கருதப்படும் ஒரு விஷயமாகும். பின்ன என்ன நம்மால் நம் சந்ததியை வளர்க்க முடியவில்லை என்றால், தன் சொந்த இரத்தத்தை காண முடியவில்லை என்றால், தன் வாரிசை தூக்கி கொஞ்ச முடியவில்லை என்றால் அதை விட கொடுமை இருக்க முடியுமா என்ன? இன்றைய உலகத்தில் நம் வாழ்வுமுறை பெருவாரியாக மாறி விட்டது. அதே போல் சுற்றுப்புறச் சூழலும் கெட்டு போய் விட்டது. இதனால் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி, மலட்டுத்தன்மை அதிகரித்து கொண்டே வருகிறது என்பது வருத்தத்துக்குரிய உண்மையாகும்.
மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு வேறு என்ன காரணங்கள் உள்ளது? உணவுகள் கூட இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளது. நம்ப முடியவில்லையா? ஆண்களுக்கு முதிர்ச்சி ஏற்படும் போது, விறைப்பு பிரச்சனை ஏற்படுவது இயல்பே. ஆனால் இள வயது ஆண்கள் கூட இந்த பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனை சற்று ஆழமாக பார்த்தால், இதற்கான காரணங்களை நம்மால் கண்டுபிடிக்க முடியும். நாம் ஏற்கனவே சொன்னதை போல் நீங்கள் படுக்கையில் சிறப்பாக செயல்படவோ அல்லது சொதப்பவோ, இன்றைய வாழ்க்கை முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மலட்டுத்தன்மைக்கு உணவுகள் மட்டுமே காரணமாக இருக்க முடியாது தான். என்றாலும் கூட உங்கள் படுக்கை வாழ்க்கையை ஒரளவிற்கு அது பாதிக்கவே செய்கிறது.
இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் சரியாக சென்றால் தான் இறுக்கமான விறைப்பு ஏற்படும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனால் இரத்த ஓட்டத்தை தடுக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். இவ்வகையான உணவுகளே மலட்டுத்தன்மையை உண்டாக்கும். இதய நோய்கள் உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும். விறைப்பு செயல் பிறழ்ச்சியால் அவதிப்படும் ஆண்களுக்கும் இதனை கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் ஆணுறுப்புக்கு ஆரோக்கியமான அளவில் இரத்த ஓட்டம் செல்லாமல் தடுக்கும் சில உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுகளும்
பதப்படுத்தப்பட்ட அனைத்து உணவுகளை இனி தொடாதீர்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளில் நமக்கு பல வழிகளில் தீங்கை விளைவிக்கும் சில சேர்க்கைகள் உள்ளது என உடல்நல வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதை உட்கொள்வதால் விறைப்பு செயல்பிறழ்ச்சி என்பதன் மூலம் உங்கள் தொந்தரவு ஏற்படும்.
அனைத்து விதமான வறுத்த உணவுகள்
ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் சுவை என்றால் உங்களுக்கு கொள்ளைப் பிரியமாகும். ஆனால் உங்கள் தமனிகள் அடைபடாமல் இருக்க வேண்டுமானால் அதனை நீங்கள் தவிர்ப்பதே நல்லது. ஏதோ ஒரு வகையில் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால், விறைப்பு செயல்பிறழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
சில பாஸ்ட் ஃபுட்கள்
சில பாஸ்ட் ஃபுட்களில் அதிகமான கொழுப்புகளும், கலோரிகளும் உள்ளது. இது உங்களை இரண்டு வழியில் பாதிக்கும். ஒன்று உடல் எடையை அதிகரிக்க செய்யும். மற்றொன்று உங்கள் தமனிகளை அடைக்கும். இவையிரண்டுமே விறைப்பு செயல்பிறழ்ச்சி ஏற்படும் வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும். இவ்வகையான உணவுகள் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும்.
மாட்டிறைச்சி மற்றும் கோழிக்கறி
சாச்சுரேட்டட் கொழுப்பு அடங்கியுள்ள உணவுகள் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு நல்லதல்ல. அவ்வகை உணவுகளை அளவாக உண்ணவும்; குறிப்பாக 30 வயதுக்கு மேலானவர்கள். மலட்டுத்தன்மையை உண்டாக்கும் உணவுகளில் ஒன்றான மாட்டிறைச்சியை தவிர்க்கவும்.
பால் பொருட்கள்
பால் பொருட்களிலும் சாச்சுரேட்டட் கொழுப்புகள் அடங்கியிருப்பதால், அதனை உட்கொள்ளும் அளவையும் குறைத்துக் கொள்ளவும். மலட்டுத்தன்மையை உண்டாக்கும் உணவுகளில் ஒன்றான பால் பொருட்களை தவிர்க்கவும்.
ஐஸ் க்ரீம்
ஐஸ் க்ரீமுக்காக நீங்கள் எப்போதும் ஏங்குபவர்களா? அளவுக்கு அதிகமாக ஐஸ் க்ரீம் சாப்பிட்டால் உங்கள் விறைப்பின் இறுக்கத்தை ஏதாவது ஒரு வகையில் பாதிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அப்படி தெரிந்தால், நீங்கள் உட்கொள்ளும் அளவை கண்டிப்பாக குறைத்துக் கொள்வீர்கள்.
சர்க்கரை உணவுகள்
ரிஃபைன்ட் சர்க்கரை கொண்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும். ரிஃபைன்ட் சர்க்கரையை அதிகமாக கொண்டுள்ள உணவுகளை அதிகமாக உண்ணும் பழக்கம் கொண்ட ஆண்களுக்கு விறைப்பு ஏற்படுவதில் சிரமம் ஏற்படும்.
சோடியம்
சோடியம் உட்கொள்ளும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கு அளவுக்கு அதிகமாக உப்பு இருக்கும் பண்டங்களை தவிர்க்கவும். சிப்ஸ் முதல் உப்பு அதிகமாக இருக்கும் இதர உணவுகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
கொலஸ்ட்ரால் உணவுகள்
முட்டைகள், சீஸ், வெண்ணெய் மற்றும் இதர உணவுகளால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகவே அவைகளை தவிர்க்கவும். ஏனெனில் இவ்வகை உணவுகள் விறைப்பு செயல் பிறழ்ச்சியை ஏற்படுத்தும்.
உறைந்த உணவுகள்
அனைத்து வகையான உறைந்த உணவுகளையும் குறைக்க வேண்டும். ஏனென்றால் இது உங்கள் விறைப்பையை ஓரளவிற்கு பாதிக்கும். உறைந்த உணவுகளுக்கு பதில் சாலட் போன்ற உணவுகளை உண்ணுங்கள்.
டப்பாவில் அடைத்த உணவுகள்
மலட்டுத்தன்மையை உண்டாக்கும் உணவுகளில் டப்பாவில் அடைத்த உணவுகளும் ஒன்றாகும். உங்கள் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்றால் டப்பாவில் அடைத்த உணவுகளை தவிர்க்கவும். மாறாக இயற்கையான உணவுகளையே உண்ணுங்கள்.
ஆல்கஹால் பானங்கள்
ஆல்கஹால் என்பது உணவு இல்லை தான் என்றாலும் கூட, விறைப்பு செயல்பிறழ்ச்சி உண்டாக்குவதில் இதுவும் முக்கிய பங்கை கொண்டுள்ளது. ஒன்று குடி பழக்கத்தை நிறுத்துங்கள் அல்லது குடிக்கும் அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

Post a Comment

 
Copyright © 2013 Antharangam