paddi vaiththiyam, kai vaiththiyam, viddilaje seiyakudiya vaiththiya muraikal, kai vaiththiyam, arokkiyam, antharankam நாம் மறந்து போன பொன்னான பயன் தரும் பாட்டி வைத்தியத்தை நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டியவது அவசியம். இன்று இல்லாவிடினும் என்றாவது ஒருநாள் உங்களுக்கோ அல்லது உங்களது வீட்டில் உள்ளபவர்களுக்கோ ஏதேனும் உடல்நல கோளாறு ஏற்படும் போது இவை உங்களுக்கு பெருமளவில் உதவும்
ஆண்மை பெருக
தேங்காய் அரைத்து அதன் சார் பிழிந்து, தேங்காய் பால் எடுத்து தினமும் பருகி வந்தால் ஆண்மை பெருகும், தாது விருத்தியாகும்.
மாதவிடாய் சோர்வு
கோதுமை கஞ்சியை மாதவிடாய் இருக்கும் காலங்களில் சாப்பிட்டு வந்தால், உடற்சோர்வு நீங்கி பலம்பெறும்.
பித்தம் நீங்க
விளாம்பழம் தினசரி ஒன்று சாப்பிட்டால் பித்தத்தைக் குணப்படுத்தும்.
தொண்டை கரகரப்பு குணமாக
சுக்கு, பால், மிளகு, திப்பிலி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொண்டை வலி சரியாக
உப்பு நீரை வாயில் வைத்து தொண்டை வரை படும்படி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி குணமாகும்.
இருமல் குணமாக
வெண்டைக்காயை சூப் வைத்துக் குடித்து வந்தால், இருமல் உடனே குணமாகும்.
கொழுப்பை குறைக்க
பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறையும்.
காது வலி
எலுமிச்சை பழத்தின் சாரை ஓரிரு துளிகள் காதில் விட காது வலிதீரும்.
குடல் புண்
குடல்புண் குண மாகவும், வயிற்றுப்புழுக்களை அழிக்கவும் அகத்திகீரை நல்ல வகையில் பயனைளிக்கும்.
நுரையீரல் ஆரோக்கியம்
தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினசரி ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.
நரைமுடி கருமையாக
பசுநெய் மற்றும் தயிர் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.
நரம்பு தளர்ச்சி குணமாக
தினந்தோறும் சில அத்திபழம் சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி சரியாகும்.
Post a Comment