Tamil Doctor tips, Tamil doctor, Tamil Sex Doctor tips, sex tips, orgasm, tips, aan kuri, aanmai kuraipardu, aan kuri kuraipadukal, Pengal, antharangam, antharanga kelvi pathilkal, aangalin sex kuraipadukalஇதழ்கள் மற்றும் யோனிமலர் எனப்படும் கிளிட்டோரிஸ் (Clitoris), வெஸ்டிபியூல் (Vestibule) போன்ற
பகுதிகள் கண்ணுக்குத் தெரிபவை. இதழ்களில் இரு பகுதிகள் உண்டு. லேபியா மெஜோரா எனப்படுவது மேல் இதழ். இந்த மேல் இதழை விரித்தால் தெரிவது, உள் இதழ். இதற்கு லேபியா மைனோரா என்று பெயர். இதில் இரண் டு அடுக்குகள் உண்டு. இந்த இதழ்கள் பெண்ணின் பிறப்புறுப்பை ஒரு “சதைக் கதவாக” இருந்து பாதுகாக்கின்றன. இவை வெறும் “சதைக் கதவு” மட்டுமி ல்லை௪ ஏராளமான உணர்ச்சி நரம்புக ள் இவற்றில் பின்னிப் பிணைந்து கிடப் பதால், இவை இன்பச் சுரங்கமும் கூட! ஒரு பெண்ணுக்கு செக்ஸ் சுகத்தை அளிப்பதில் இதழ்களுக்குப் பெரும்பங் கு இருக்கிறது. இதில் லேபியா மைனோரா இதழை விரித்தால், அதற்குள் இருப்பதுதா ன் வெஸ்டி பியூல். இது பிறப்புறுப்பின் உள் பகுதி. இதில் சிறுநீர் துவாரம் ம ற்றும் பெண்குறியின் உள்பாதை இரண்டும் இருக்கும்.
பெண்களின் பிறப்புறுப்பு காவலர் களான இதழ்கள் பற்றி சுவாரஸ் யமான விஷயம்௪ இந்த இதழ்க ள், பெண்ணுக்குப் பெண் வித்தி யாசமாகவே இருக்கும். ஒரே பெ ண்ணுக்குக் குழந்தை பெற்றெ டுப்பதற்கு முன்பு ஒரு மாதிரியும், பெற்றெடுத்த பின்பு வேறு மாதிரியும் இருக்கும். இதுபோல நிறை ய குழந்தைகளைப் பெற்றெ டுத்த பெண்ணுக்கு வேறு மாதிரி இருக்கும். இதற்கா கப் பெண்கள் கவலைப்படத் தேவையில்லை.
பொதுவாகவே பெண்கள் தங்கள் உடல் உறுப்புகளின் மீது அதிக அக்கறையும் கவலையும் கொள்பவர்கள். “அடடா௪ நெற்றி கொஞ்சம் பிறை மாதிரி இருந்திருக்கலாமே. இடுப்பு வெண்ணெய்த் தீவாக இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும். இப் படி மடிப்பு மலைத்தொடராக இரு க்கிறதே உதடு இப்படி மணிபர்ஸ் மாதிரி அமைஞ்சிருச்சே! ௪” என் றெல்லாம் கவலைப்படுவார்கள். இத்தகைய பெண்களில் பலருக் குத் தங்களின் பிறப்புறுப்பு மீதும் நிறை ய கவலைகள் உண்டு.
நியூயார்க் நகரில் பெட்டி டாட்ஸன் என்று ஒரு பெண்மணி பென் சில் ஓவியம் வரைவதில் கில்லாடி. சிறு வயதிலிரு ந்து தான் அனு பவித்த சுய இன்ப பழக்கத்தால் தன் பிறப்புறுப்பு சிதிலமடைந் திருக்குமோ என்ற கவ லை அவரை வாட்டி எடுத் தது. இந்தப் பயத்தால், கணவருடன் உறவில் ஈடு படும் போதெல்லாம் ஆ டைகளைக் களைவதற்கு சம்மதிக்கவே மாட்டார். இதற்கிடை யே வேறு ஏதோ காரணத்தால், கணவன் அவரை விட்டுப்பிரிய.. டாட்ஸனை தனிமை வாட்டியது. அப் போது சில ஆண் நண்பர்க ளின் நட்பு அவருக்குக் கிடைத்தது. அதில் ஒரு வன் வற்புறுத்தி ஆடை யைக் களைய வைத்து, “சுய இன்ப பழக்கத்தால் பிறப்புறுப்பு சேத மடையவில்லை, பார்!” என்று காட்டியபிறகே அவருக் கு உண் மை புரிந்தது.
அதன்பிறகு தன்னம்பிக்கை பெற்ற டாட்ஸன் ஓவியம் வரைவதில் முழு நேரம் ஈடுபட்டார். தன்னு டைய பென்சில் ஓவியங்க ளை வைத்துக் கண்காட்சியும் நடத்தி னார். இந்தக் கண்கா ட்சியில் இடம்பெற்ற டாட்ஸ னின் ஓவியங்களில் இயற் கை காட்சிகளோ, மலர்க ளோ, மரங்களோ இடம்பெற வில்லை. இடம் பெற்றிருந்த அத்தனை ஓவியங்களும் பெண் ணின் பிறப்புறுப்புகள்தான்! டாட் ஸனை புகழ் தேடிவந்தது.
அடுத்து அவர், “பாடி செக்ஸ் ஒர் க்ஷாப்” எனும் பெயரில் பெண் பிற ப்புறுப்புகளைப் பற்றிய கருத்தரங் கத்தை நியூயார்க் நகரில் நடத் தினார். பெண்கள் கூட்டம் முண் டியடித்தது. ஆண்களுக்கும் ஒரு பிரத்யேக ஒர்க்ஷாப் நடத்துமளவு பிரபலமானார். பின்னாட்க ளில் புகழ்பெற்ற பிரபல செக்ஸ் நிபுண ராகவும் டாட்ஸன் மாறி னார்.
இவரின் ஜாதகத்தை ஏன் சொல்கி றேன் என்றால் புகழ்பெற்ற அறிவு ஜீவிகள், கலைஞர்கள், புத்திசாலிகள்கூட பிறப்புறுப்புக ளைப் பற்றி தவறாகப் புரிந்து கொண்டி ருந்தார்கள் என்பதற்காகத் தான்.
பெண்ணின் ஜனன உறுப்பில் கண்ணுக்குத் தெரியாமல் உள் ளே இருக்கும் பகுதிகளில் பெண் குறி உள்பாதை, கர்ப்பப் பையின் வாசல், கர்ப்பப்பை, ஃபெலோபி யன் டியூப், கருமுட்டைப் பை ஆகி யவை அடங்கும்.
பெண் பிறப்புறுப்பின் உள் பாதை, கண்ணுக்குத் தெரியும் வெஸ்டி பியூல் பகுதியில் தொடங்கிக் கர்ப்பப்பை வாசல் வரை அமைந்தி ருக்கும். உள் பாதையில் ஒரு அங்குல தூர த்தில் அமைந்திருப்பது கன்னி த்திரை. இதைப்பற்றிய செய்தி களை முந்தைய அத்தியாய ங்களிலேயே நாம் பார்த்திருக்கிறோம்.
வெவ்வேறு அளவுள்ள பாதங் களுக்கு ஏற்ப சுருங்கி விரியும் தன் மைகொண்ட கால் சாக்ஸ் மாதிரிதான் இந்தப் பிறப்புறுப் பின் உள் பாதையும் அமைந்தி ருக்கும். சில பெண்கள், ஆண் அளவுடன் ஒப்பிட்டுக் கவலை கொள்வார்கள். தேவை இல் லாத கவலை இது. இந்தக் கவ லையைத் தூக்கி வீசாத பெண் களுக்குத் திரும ணத்துக்குப் பின்னர் “வெஜினிஸ்மஸ்” (Vaginismus) என்கிற செக்ஸ் பிரச் னை ஏற்பட்டு விடும். இது போன்ற உணர்வில் உள்ள பெண்களு க்கு, பிறப்புறுப்பு இறுக்கமாகி பிரச் னை வரும். இத் தகைய பெண்களு க்கு நான் சொல்லிக்கொள்ளும் ஒரு செய்தி, “பத்தாவது மாதம் ஒரு குழந் தையே ஜம்மென்று இந்தப் பாதை வழியேதான் வெளிவருகிறது. அப்படி யிருக்க பயம் எதற்கு?”
அடுத்துக் கர்ப்பப் பையின் வாசல். இதுவும் நீளும் தன்மை கொ ண்டதே. இப்பகுதியில் மியூக்கஸ் எனும் சளி போன்ற திரவம் உற்பத்தியாகி, அது கர்ப்பப்பை வாசலில் அடர்த்தி யான சளிப்படலமாக அமைந்திரு க்கும். கருமுட்டை வெளிவரும் நாளில், இந்த சளிப் படலம் கரை ந்து, பிறப்புறுப்பு பாதை வழியாக வெளிவந்து விடும். இதனையே வெள்ளைப்படுதல் என்று தவறா க நினைக்கும் பெண்களும் இருக் கிறார்கள்.
இதை, “இயற்கையான குடும்பக் கட்டுப்பாடு முறை” என்று நினை த்துக்கொண்டு உறவில் ஈடுபடுப வர்களும் இரு க்கிறார்கள். கரு முட்டை வரும் நாளில் மியூக் கஸ் சளிப்படலம் மெலிதாகிக் கரைந்துவரும் விஞ்ஞான உண்மையை உல்ட்டாவாகப் புரிந்து கொண்டு, அந்த நாட்களில் உடலுறவு கொள்வ தைத் தவிர்ப்பார் கள். ஆனால், இந்த நம்பிக்கை விஞ்ஞானப்பூர்வமானது அல்ல.
Post a Comment