BREAKING NEWS

பெண்கள்

வினோதம்

பொதுமருத்துவம்

ஆண்கள்

Saturday, 17 January 2015

ஆண்களே! ‘அந்த’ இடத்தில் ரொம்ப அரிக்குதா? அதை தடுக்க இதோ சில டிப்ஸ்…

Tamil Doctor tips, Tamil doctor, Tamil Sex Doctor tips, sex tips, orgasm, tips, aan kuri, aanmai kuraipardu, aan kuri kuraipadukal, Pengal, antharangam, antharanga kelvi pathilkal, aangalin sex kuraipadukalபிறப்புறுப்பில் பெண்களுக்கு மட்டும் தான் தொற்றுகள் ஏற்படும் என்பதில்லை, ஆண்களுக்கும் தொற்றுகள் ஏற்படும். இப்படி பிறப்புறுப்பில் தொற்றுகள் ஏற்பட்டால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்திவிடும். சாதாரணமாக தலையில் பொடுகு அல்லது பேன் இருக்கும் போது, தலையில் கை வைத்தாலே அசிங்கமாக இருக்கும் போது, பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும் போது பொது இடங்களில் அங்கு கை வைத்துக் கொண்டிருந்தால் நன்றாக இருக்குமா என்ன?
ஆகவே பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட ஆரம்பிக்கும் போது, அதனை சரிசெய்வதற்கான முயற்சியில் உடனே ஈடுபட வேண்டும். குறிப்பாக இப்படி அரிப்புகள் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்:
* சுத்தம் இல்லாமை
* இறுக்கமான உள்ளாடை அணிவது
* சிறுநீர்
* அந்தரங்க பேன்
பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களை தடுப்பதற்கான வழிகள்:
* தினமும் குளிக்கும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவ வேண்டும். அதிலும் நுனித்தோலை நீக்கிவிட்டு, மைல்டு சோப்பு போட்டு கழுவ வேண்டும். ஏனெனில் அந்த இடத்தில் தான் ஆரோக்கியமற்ற பாக்டீரியாக்களானது இருந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.
* குறிப்பாக பிறப்புறுப்பை கழுவும் போது, கெமிக்கல் அதிகம் உள்ள பொருட்களைப் எப்போதும் பயன்படுத்தக்கூடாது. அதுவே கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்தும்.
* எப்போதும் நல்ல மென்மையான, லூசாக இருக்கும் காட்டன் உள்ளாடைகளை அணிய வேண்டும். இதனால் காட்டனானது பிறப்புறுப்பில் ஈரம் தங்குவதை தடுக்கும். ஏனெனில் ஈரமுள்ள இடத்தில் பாக்டீரியாக்கள் வளர்ச்சி அடைந்து அரிப்புக்களை ஏற்படுத்தும்.
* பிறப்புறுப்பில் அரிப்புகள் அதிகம் இருந்தால், தினமும் இரண்டு முறை உள்ளாடைகளை மாற்ற வேண்டும். மேலும் அப்படி மாற்றும் போது, பிறப்புறுப்பை நன்கு கழுவி பின் போட வேண்டும்.
* தவறாமல் பிறப்புறுப்பில் வளரும் முடிகளை அவ்வப்போது ஷேவிங் அல்லது ட்ரிம் செய்துவிட வேண்டும். ஏனெனில் அந்த முடிகளில் பேன் வருவதால் தான் அரிப்புக்கள் ஏற்படுகின்றன.
* ஆண்குறிகளில் சிறு புண்களுடன் சிவப்பு நிறத்தில் இருந்தால், அது தோல் அழற்சி மற்றும் சொரியாசிஸ் வந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் மருத்துவரை உடனே அணுக வேண்டும்.

* முக்கியமாக பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், பிறப்புறுப்பை ஈரம் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறுநீர் கழித்தப் பின்னர், நன்கு சுத்தமாக கழுவி, அவ்விடத்தில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்கூறியவற்றை பின்பற்றினால், நிச்சயம் பிறப்புறுப்பில் ஏற்படும் அரிப்புக்களையும், இதர தொற்றுக்களையும் தடுக்கலாம்.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

Post a Comment

 
Copyright © 2013 Antharangam