BREAKING NEWS

பெண்கள்

வினோதம்

பொதுமருத்துவம்

ஆண்கள்

Friday, 20 February 2015

தாம்பத்தியம் உயிர்ப்புடன் இருக்க‍ பாலியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்


தம்பதியரின் சந்தோசமான தருணங்கள் தாம்பத்ய உறவின் போது ஏற்படுவதுண்டு. ஒரு சில நாட்களில் அதுவும் போரடித்து விடும். உறவு என்ப து வெறும் கடமையாக மட்டுமில்லாம ல் உயிர்ப்புடன் இருக்க பாலியல் நிபு ணர்கள் கூறும் ஆலோசனைகள் பின் பற்றுங் கள்.
புதுசா இருக்கட்டும்
எதுவுமே ஒரே மாதிரியாக இருந்தால் அலுப்பு தட்டிவிடும் எனவே வழக்கத்தில் இருந்து வேறுபடுங்கள்.
புது இடம், புதிய முயற்சி ஆர் வத்தை அதிகரிக்கும்.
தனிமையில் சந்திப்பு
அலுவலகம் செல்லும் ரகசிய மாய் ஒரு குறிப்பு எழுதுங்கள். மாலைப் பொழுதில் புதிதாய் ஒரு இடத்திற்கு வரச்சொல்லி அங்கே காத்திருங்கள். அழகா ன ஆடையில் கணவரை கவர் ந்திழுக்கும் வகையில் நீங்கள் அமர்ந்திருப்பதை கண்டு உங்க ளவர் அசந்து போவார். அந்த தருணத்திலேயே காதல் நெருப்பு பற்றி க்கொள்ளும்.
கொஞ்சம் பிரிவு அதிக நெருக்கம்
இருவரும் தனித் தனியே சுற்றுலா செல்லுங்கள். அது அலுவலக வே லையாகவும் இருக்கலாம். அந்த சில நாள் பிரிவு நெருக்கத்தை அதிகரிக் கும். எப்பொழுது சந்திப்போமோ என ஏக்கத்தை ஏற்படுத் தும்.
முதல் ஸ்பரிசம்
முதல் இரவில் நடந்த சம்பவங்கள். தேனிலவு நினைவுகளை மனதில் ஓட்டிப்பாருங்கள் அந்த நினைவுகள் புது உத்வேகத்தை உருவாக் கும் என்கின்றனர் நிபுணர்கள்.
சுறு சுறுப்பான செயல்பாடு
உற்சாகம் தரும் விளையாட்டில் ஈடுபடுவது உறவிற்கான ஹார் மோன்களை சுரக்கச்செய்யும் என் கின்றனர் நிபுணர்கள். வேகமாக ஆற்றில் படகில் செல்வது, சுறு சுறுப்பாக வேலை செய்வது. நீந்து வது என உற்சாகமாக செயல்படு ங்கள். புதுவித த்ரில் ஏற்படும் என் கின்றனர் நிபுணர்கள்
சில நாள் விடுமுறை
தினமும் உறவு என்பது போராடி த்து விடும். ஒருவாரம் விடுமுறை விட்டுப்பாருங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். ஒரு குறிப்பிட்ட நா ளில் அதை வைத்துக்கொள்ளலா ம் என தீர்மானியுங்கள். அது வரை தீண்டல், விளையாட்டு, சின்ன சின்ன முத்தம் என எதிர் பார்ப்பை எகிற வைக்கலாம். அதற்காக ஒரேடியாக லீவ் தேவையில் லை என்பது அவர்களின் அறிவுரை.

பிடித்திருந்தால் Like செய்து உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள் மற்றும் எமது பக்கங்களில் உள்ள விளம்பரங்களை கிளக் செய்து எமது சேவையை தொடர உதவுங்கள். வருகைக்கு நன்றி!!!

"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

buysellask

Post a Comment

 
Copyright © 2013 Antharangam